Mr. Sellathamby Mathusuthanan

(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர், முன்னாள் துணை ஆசிரியர் - வலம்புரி நாளிதழ்)

Sellathamby Mathusuthanan

Date of Birth: 06 October 1938 - Deceased: 12 November 2026

யாழ். மண்டைதீவு கிழக்கு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்தம்பி மதுசூதனன் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லத்தம்பி - நாகபூரணம் தம்பதியினரின் மூத்த மகனும், இலங்கைநாதன் - மதியாபரணம் தம்பதியினரின் மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மதியரசி (இலண்டன்-முன்னாள் ஆசிரியை - கொக்குவில் ஞானபண்டிதா மகா வித்தியாலயம்), மதிச்செல்வி (சுவிஸ்-முன்னாள் ஆசிரியை - கோண்டாவில் சி.சி.த.க பாடசாலை) ஆகியோரின் தந்தையும்,

கலாதரனின் (பிரான்ஸ்) அன்புப் பெரியப்பாவும்,

புலவர் செ.பரமநாதன் (இ.போ. சபை பரிசோதகர்), காலஞ்சென்றவர்களான தருமராசா, தேவகனி, நடராசா ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மநாதன், பாலசுந்தரம், ஸ்ரீபாமா, இராசமலர் ஆகியோரின் மைத்துனரும்,

சரோசினிதேவி, இராசகோபால், மகேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவரூபன், திருமாவளவன் ஆகியோரின் மாமனும்,

கம்ஷிகன் (இலண்டன்), ஆகாஸ் (சுவிஸ்), ஆஷியா (சுவிஸ்), அவனேஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கோண்டாவிலுள்ள அன்னாரது இல்லத்தில் முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2026 00:00)