திருமதி. செல்லத்துரை மெல்லியம்மா

செல்லத்துரை மெல்லியம்மா

தோற்றம்: 12 பெப்ரவரி 1934 - மறைவு: 16 அக்டோபர் 2025

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நல்லூர் முத்திரைச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை மெல்லியம்மா அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி - சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும், வைரமுத்து - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

 

செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணமணி, பரிமளம் மற்றும் கமலவேணி காலஞ்சென்ற முருகதாஸ், மோகனதாஸ் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, நாகமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பராணி, காலஞ்சென்ற கருணாநிதி, சோமகலா (கனடா), சிவஞானம், ஜீவதாம்பாள் (இலண்டன்), விமலேஸ்வரன் (அமெரிக்கா), நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசதாசன், சிவதாசன்,சிவபாதலிங்கம் (இலண்டன்), பானுஜா (அமெரிக்கா), காலஞ்சென்ற முருகதாஸ் காந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயக்குமார் - கௌரி, ஆஷா - சுதர்சன் (இலண்டன்), கிதுர்ஷன் (இலண்டன்) - தர்ஷி, கவின் (இலண்டன்), திருப்பிரியா - தனராஜன் (அமெரிக்கா), டிஷந்தன், அம்சிகன் (அமெரிக்கா), அமீசா (அமெரிக்கா), சஜிதவேணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிந்துஜா, விஜித், டிவானி (அமெரிக்கா), மகிழன் (அமெரிக்கா), யஸ்னா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இல- 41/13, செட்டியார் தோட்டம், நல்லூர் (ஜமுனா ஏரி) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2025 00:00)