Mrs. Sellathurai Jeyalatchumi
Date of Birth: 27 October 1956 - Deceased: 19 April 2026
"நினைவுகள் மட்டும் நெஞ்சில் நின்றுவிட்டது, நீ சென்ற பாதை திரும்பாததாய் மாறிவிட்டது...
உன் சிரிப்பு இன்னும் காதில் ஒலிக்கிறது. ஆனால் உன் முகம் கண்களில் காணவில்லை...
காலம் கடந்து போனாலும், உன் நினைவுகள் எப்போதும் நம்முடன்... அன்புடன் வாழ்ந்த உன் வாழ்க்கை. என்றும் எங்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும்..."
ராகலையை பிறப்பிடமாகவும், இல- 42 ஆரியபுர பொகவந்தலாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை ஜெயலெட்சுமி அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேஸ்வரன் (கொழும்பு ), பெசில்சஹாசன் (ஆசிரியர் - ஹைலண்ட்ஸ் ஹட்டன்), மதிவதனி, சுபத்ரா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
வனிதா (ஆசிரியை - கெம்பியனி த.ம.வி), திஷாந்தி (ஆசிரியை - நன்சின் த.ம.வி), சசிகுமார், சுராந்திரநாத் ஆகியோரின் மாமியாரும்,
ரஷ்மிவர்தனா, அனல்யாப்ரதிக்ஷா, ஹஸ்வதி, ரதுல்யாப்ரதிக்ஷா, ஆதிரா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது மகன் இல்லத்தில் வைக்கப்பட்டு, 20-04-2026 திங்கட்கிழமை அன்று, மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
லிங்கேஸ்வரன் (மகன்):- +94 71 377 7465
www.tamilthakaval.org
