Mr. Sellathurai Manickarasa

(முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் - திருகோணமலை)

Sellathurai Manickarasa

Date of Birth: 12 March 1947 - Deceased: 21 October 2026

"உடல் மறைந்தாலும் உங்கள் நற்பெயர் என்றும் வாழும்...

ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

நல்லவர் என்றும் நெஞ்சங்களில் நிலைத்திருப்பார்..."

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை மாணிக்கராசா அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - காளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மாரிமுத்து (ஒய்வுநிலை கிராம உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், நடராசா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதானந்தன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், திருகோணமலை) அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜீவகுமாரி அவர்களின் அன்பு மாமனரும்,

செல்வன் தேசிகன், செல்வி கோபிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் திருகோணமலை, கடல்முக வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2026 00:00)