திரு. செல்லத்துரை மயில்வாகனம் (வயவையூரான்)

(ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை - வடக்கு சாலை பரிசோதகர்)

செல்லத்துரை மயில்வாகனம் (வயவையூரான்)

தோற்றம்: 05 ஜனவரி 1940 - மறைவு: 29 டிசம்பர் 2025

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மயில்வாகனம் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா (இ.போ.ச -(வ)), கண்ணதாசன் (ஜேர்மனி), விஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஹரன் (லிட்டில் லஜன் ஏரிய - ), பௌசிகா (இலங்கை), மயூரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷாதனா (இலங்கை), கிருத்திக்‌ஷன் (இலங்கை), கிஷானி (ஜேர்மனி), ஹரிஸ் (ஜேர்மனி), கருண் (ஜேர்மனி), அதர்வா (பிரான்ஸ்), கவின் (பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி, நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற புவனேந்திரன் (ஓய்வுபெற்ற சாரண ஆணையாளர்), தெய்வேந்திரன் (சித்த ஆயுர்வேத வைத்தியர்), குலேந்திரன் (ஓய்வுபெற்ற மின்மாணி வாசிப்பாளர்), சரோஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2025 00:00)