Mrs. Sellathurai Nagarathinam (Sarasu)

Sellathurai Nagarathinam (Sarasu)

Date of Birth: 17 February 1937 - Deceased: 03 October 2024

யாழ். ஆவரங்கால் மேற்கு, நெல்லியோடையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு தோப்பை வசிப்பிடமாகவும், தற்போது வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை நாகரத்தினம் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி-சேதுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வபூபதி, காலஞ்சென்ற திரிபுரசுந்தரி, காங்கேயமூர்த்தி, பத்மசுந்தரி, சித்திராதேவி, ஶ்ரீதரன், காலஞ்சென்ற ஶ்ரீகுகன் சுசீலாதேவி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் A.F.Raymond Funeral Directors (ரேமண்ட்) Raymond House (Senanayake Mawatha, Colombo-08) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி:-

இல-13/9, தயா வீதி,

வௌ்ளவத்தை, கொழும்பு.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2024 04:00)