திரு. செல்லத்துரை நித்தியானந்தம்
மறைவு: 11 பெப்ரவரி 2022
பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அத்தியடி, சண்டிலிப்பாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நித்தியானந்தம் அவர்கள் நேற்று 11-02-2022ம் திகதி வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை தங்கம்மா தம்பதியரின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி, காலஞ்சென்ற பரராஜசிங்கம், மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், இராசசிங்கம் மற்றும் கலாநிதி எதிர்வீரசிங்கம் (அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி (செல்லக்கண்டு), பரராசசிங்கம், செகராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுசீந்திரன், நந்தினி (சுவிற்சலாந்து), சிவஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவரதிகன், நிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-02-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அன்னாரின் சண்டிலிப்பாய் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக காலை 10.00 மணியளவில் விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
"அன்னைவாசா"
சண்டிலிப்பாய்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2022 03:54)
