வைத்திய கலாநிதி. செல்லத்துரை பரஞ்சோதி

செல்லத்துரை பரஞ்சோதி

தோற்றம்: 11 ஜனவரி 1936 - மறைவு: 23 மே 2026

மட்டக்களப்பு - காரைதீவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட நம் ஊரின் முதலாவது வைத்திய கலாநிதியும், மட்டக்களப்பு St Michaels College இன் முதலாவது வைத்தியருமான டாக்டர். செல்லத்துரை பரஞ்சோதி அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட தந்தி இலாகா பரிசோதகரும், கண்ணகை அம்மன் கோயில் தர்மகத்தாவுமாகிய செல்லத்துரை இன்ஸ்பெக்டர் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா (தபாலதிபர்) - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கருணாகரன் (Spacer Medicine, Nasa, America), Dr. ரேணுகா (இலண்டன்), சுசித்திரா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி பத்மநாதன் (உத்தரவுபெற்ற நில அளவையாளர்), சண்முகநாதன் (பெருந்தோட்ட அத்தியட்சகர்), மனோன்மணி, முருகேசபிள்ளை மற்றும் லெட்சுமி அம்பாள், சரஸ்வதி, பாலசுப்ரமணியம் (இளைப்பாறிய அதிபர்), கதிர்காமநாதன் (பொறியியலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர், இலண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை (உள்ளுராட்சி அதிகாரி), மார்க்கண்டு (முதலாளி), தர்மலிங்கம் (விரிவுரையாளர், Scour Headquarters Commissioner), பாலயோகினி, மகேஸ்வரி (யோகம்மா), ராஜேஸ்வரி, வேல்முருகு, பொன்னம்மா, புவனேஸ்வரி, தங்கத்துரை மற்றும் தியாகராஜா (ஆங்கில ஆசிரியர்), பெசிமேரி (ஆசிரியை), பத்மசுந்தரி (ஓய்வு பெற்ற நூலகப் பொறுப்பாளர்), சிவகுமாரி (பாலர் பாடசாலை, இலண்டன்), மகேஸ்வரி, மயில்வாகனம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன் (TO), காலஞ்சென்ற இராமகிருஷ்ணன் (OIC), மற்றும் ராஜாகிருஷ்ணன் (பிரான்ஸ்), கலைவாணி (ஓய்வு நிலை மாகாண பணிப்பாளர், பொறியியலாளர் RDA), சிதம்பரநாதன் (ஓய்வுநிலை பெரும்பாக உத்தியோகத்தர்), சுந்தானந்தன் (இலண்டன்), வித்தியானந்தன் (ஓய்வு நிலை சிறைச்சாலை உத்தியோகத்தர்), சிவானந்தன் (கனடா), சித்திரா, Dr. பிரபாசங்கர் (MS சம்மாந்துறை), சிவசங்கர் (உதவிப் பொறியியலாளர்), Dr உமாசங்கர் (பல் வைத்தியர், நிந்தவூர்), மோகன்சங்கர் (பொறியியலாளர்), நிஷாந்தி, விஜயந்தி (இலண்டன்), செந்தூரன் (விவசாயப் போதனாசிரியர்), ராதிகா (இலண்டன்), Dr. நிமலன், (Orthopedic Surgeon, இலண்டன்), பாலகுமார் (வங்கி முகாமையாளர்,  இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரகுபதி (அவுஸ்திரேலியா), சுகுணா ஆகியோரின் சித்தப்பாவும்,

பகிரதன் (முன்னாள் காரைதீவு கன்னிப் பிரதேசசபை உறுப்பினர்), பகிரதி (இலண்டன்), பரணிதரன், பவித்திரன் (Abi Studio), காலஞ்சென்ற கௌசல்யா, மயூரன் (இலண்டன்), ரூபன் (இலண்டன்), சேயோன் (இலண்டன்) ஆகியோரின் பெரியப்பாவும்,

அவந்திக்கா (இலண்டன்) இன் அன்பு அப்பப்பாவும்,

மேனகா (இலண்டன்), பூர்ணிமா (இலண்டன்), லக்ஸ்மன் (இலண்டன்), ரோசினிதேவி (இலண்டன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 75 468 7263

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2026 00:00)