திருமதி. செல்லதுரை பிள்ளை விஜயலெட்சுமி
தோற்றம்: 03 செப்டம்பர் 1948 - மறைவு: 07 ஜனவரி 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லதுரை பிள்ளை விஜயலெட்சுமி அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமிபிள்ளை - சிவகாமியம்மாள் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான ம.மோ. அருணாசலம்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்லதுரை பிள்ளை (சாமிமலை தனலட்சுமி ஸ்டோர்ஸ் - உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத், ஸ்ரீகாந்த், பிரபிநாத் ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஸ்ரீவித்யா, கார்த்திகாயினி ஆகியோரின் மாமியாரும்,
சுப்பையாபிள்ளை, தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, சுகுமார் மற்றும் சுசிலாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மூக்கப்பிள்ளை, ருக்மணி, தனலட்சுமி, நவமணி (புஷ்பம்) மற்றும் தட்சணாமூர்த்தி (Candy Colour Centre- Kandy) ஆகியோரின் மைத்துனியும்,
செல்வராஜபிள்ளை - காந்திமதி (மயூரா டெக்ஸ்டைல்-கொழும்பு), ஜெயராமன் - கௌரி மனோகரி (பாமா ஜீவலர்ஸ் - நீர்கொழும்பு) ஆகியோரின் சம்பந்தியும்,
அருண், பிரணவன், பிரகத்தியா, கீரண, அனிகா ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி முதல் (இல-165/1, விபுலசேன மாவத்தை, கொழும்பு-10) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-01-2025 சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
