Mr. Sellathurai Rasarathinam (Palani)

(Star Body Builders நிறுவன உரிமையாளர்)

Sellathurai Rasarathinam (Palani)

Date of Birth: 01 July 1952 - Deceased: 26 December 2025

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் மற்றும் தாண்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை இராசரத்தினம் அவர்கள் 26-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசு - இராசம் தம்பதியினரின் மருமகனும்,

தேவரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை), பிரேமிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம்), தர்ஜினி (அலுவலக உதவியாளர் - வவுனியா வடக்கு கல்வி வலயம்), சாள்ஸ்ராஜ் (மின்னியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

மனோன்மணி (கண்ணா எள்ளுபாகு உரிமையாளர் - ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற சிங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவனேஸ்வரன் (சாரதி), செல்வகுமார் (ஆசிரியர் - முல். கரிப்பட்ட முறிப்பு அ.த.க.பாடசாலை), உதயகுமார் (சாரதி), மிலக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிஷிக்கா, பரணிதா (வவு. இறம்பைகுளம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2025 00:00)