திரு. செல்லத்துரை செல்வராசா (நாதன்)
தோற்றம்: 03 அக்டோபர் 1954 - மறைவு: 13 ஆகஸ்ட் 2025
யாழ். கொக்குவில் கிழக்கு பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செல்வராசா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - விஜலக்ஷ்மி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் - கனகாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,
சுவேந்திராதேவி (ரஞ்சி) அவர்களின் பாசமிக்க கணவரும்,
மயூரிகா (இலண்டன்), கபிலன் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுதர்ஷனின் அன்பு மாமனாரும்,
அமுதாம்பிகை, காலஞ்சென்ற இளமுருகன், சிவகுமார், கமலாம்பிகை, செல்வகுமார், மகாதேவன், ஸ்ரீனிவாசன், குகதாஸ், தணிகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கமலநாயகி, பாலகுமார், சௌந்தர்ராஜன், நந்தகுமார், அருணாதேவி, இராஜ்குமார், புவனேந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
விகாஷன், ஹர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் நந்தாவில் லேன், கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
