திரு செல்லத்துரை செந்தில்மணி

(முன்னாள் ஆசிரியர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை)

செல்லத்துரை செந்தில்மணி

தோற்றம்: 09 நவம்பர் 1952 - மறைவு: 15 மார்ச் 2023

யாழ் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும்  சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்  ஆசிரியராகவும் மற்றும்  கோப்பாய் ஆசிரியர் கலாசாலை  பிரதி அதிபராகவும் (BSc,M.Ed, S.L.E.A.S ,PGDE)  கடமைபுரிந்து ஓய்வுபெற்ற திரு செல்லத்துரை செல்வமணி அவர்கள் இன்று 15-03-2023ம் திகதி புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை,  பாரசக்தி(தங்கரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி , அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகன்,
 
மாலினி(முன்னாள் ஆசிரியை (Kollupitiya, Methodist Colleage) அவர்களின் அன்புக் கணவரும்,
 
வாசுகி(ஆசிரியை,கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், மயூரன்(லண்டன்),
துவாரகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

பிறேம்குமார், லபோஷி, விவேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மீனாச்ஷி, ஜெய்சன், மைலேஷ், றோஷன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
செந்தில்மலர்(கனடா), காலஞ்சென்ற செல்வமலர், நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
ராஜகுலேந்திரன், சரவணபவன், ரவீந்திரன், ரவிச்சந்திரன், ரவிச்சக்கரவர்த்தி, ரவிராஜசிங்கம்,
வசந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 16-03-2023ம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- மனைவி,பிள்ளைகள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2023 00:39)