Mr. Sellathurai Thavarasa

Sellathurai Thavarasa

Date of Birth: 22 February 1944 - Deceased: 23 October 2024

யாழ். சிவன் வீதி, கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை தவராசா அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-தையல்முத்து தம்பதியினரின் பாசமிகு புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்-தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற ரதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரதீபன், ஜெனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜி, சிவராஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிஷா, சாருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி, இராணிமலர், கனகாம்பிகை, மகேந்திரராசா, மல்லிகாதேவி, மன்மதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான யோகநாதன், நவபாலன் மற்றும் ரதிக்குமாரி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின்  மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2024 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் இல-69, பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள துதி அந்தியகால சேவை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் கோண்டாவில் வடக்கு கலைவாணி மக்கள் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2024 04:00)