திரு செல்லத்துரை துதிபாலசுந்தரன் (துதி)

(மகாஜன கல்லூரியின் பழைய மாணவர், விற்பனை பிரதிநிதி - E.B.Cresy & Company, ஹோட்டல் நிர்வாகி - மஸ்வெல் ஹில், கரும எண் ஜோதிடம் புத்தகத்தை வெளியிட்டுள்ளார், Consultant in Management Science Ph.D., F.A.I.M.S)

செல்லத்துரை துதிபாலசுந்தரன் (துதி)

தோற்றம்: 09 அக்டோபர் 1945 - மறைவு: 04 டிசம்பர் 2021

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Muswell Hill, Hornsey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை துதிபாலசுந்தரன் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம் தம்பிஐயா இரத்தினம்மா தம்பிஐயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஷினி, மதியழகன், சுபோஷினி ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,

நந்தகுமார், டாக்டர் சிந்துஜா, டாக்டர் கிறிஸ்டோபர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேஜல், அருனேஷ், மாயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாந்தலட்சுமி(இலங்கை), தனபாலசுந்தரம்(சுவிஸ்), ரவிபாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், பேபி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தனஜா, தனஜன், அஜிதா, விஜய் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தம்பிஐயா சுப்ரமணியம், தம்பியா நடராஜா, ராஜேஷ்வரி மார்கண்டேயர், சரோஜினி அருந்ததிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நீங்கள் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2021 11:12)