Mr. Sellathurai Vijayananthan

Sellathurai Vijayananthan

Date of Birth: 04 May 1935 - Deceased: 20 November 2025

மட்டகளப்பைப் பிறப் பிடமாகவும், செங்குந்த விதி, சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி,  வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட`திரு. செல்லத்துரை விஜயானந்தன் அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு கணவரும்,

தயானந்தன் (AI பேராசிரியர், விஞ்ஞானி பேச்சாளர் - இலண்டன்), சச்சிதானந்தன், (அவுஸ்திரேலியா Computer  புரோகிராமர்), நித்தியானந்தன் (இலண்டன்), சரோஜினி (யாழ்ப்பாணம்) ஆகியோரின்  அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுகவதி,விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மைதிலி, இந்து, கனகேஸ்வரி, பபி ஆகியோரின் பாசமிக்க மாமனாரும்,

லக்ஷ்மன் (புருனே), சாந்தீபன், அனோஷ், தில்கிஷி, ஹம்சாயினி, ஜெகஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரமானந்தம், சுந்தரம்மா ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23 11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல- 11, மகாகவி பாரதியார் வீதி வட்டுக்கோட்டையில் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2025 00:00)