Mr. Sellethurai Kamalanathan

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

Sellethurai Kamalanathan

Date of Birth: 27 April 1955 - Deceased: 15 June 2025

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கமலநாதன் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சண்முகராஜா - எழுபங்கநாச்சியார் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் (முன்னாள் பீடாதிபதி - யாழ் பல்கலைக்கழகம்), இராமச்சந்திரன் மற்றும் சிவயோகம், செல்வநாயகி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

கவாஸ்கர் (கணக்காளர் - Auto Motive Pvt Ltd), சுபாஸ்கர் (பிரான்ஸ்), சபீஸ்கர் (இலண்டன்), நிவாஸ்கர் (இயக்குனர் - UPR Courier Service Pvt Ltd) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோககீதா (விரிவுரையாளர் - தேசிய கல்வி நிறுவகம்), சுஜிதா (பிரான்ஸ்), ரதினா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆர்ஜித் (பிரான்ஸ்), ஆரவ்யா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சத்தியலட்சுமி, நிர்மலாதேவி, காலஞ்சென்ற நவரத்தினம், கேதாரநாதன், இராஜபூபதி, காலஞ்சென்ற பாலகுமார், கலாதேவி, சந்திரவதனி, ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கந்தவேல், காலஞ்சென்ற வரதராஜா, வரதலிங்கம், புஷ்பமலர், கலைச்செல்வி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

கனீந்திரன், குலச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-92, சென். மேரி வீதி, மட்டக்குளியில் அமைந்துள் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-06-2025 வியாழக்கிழமை அன்று மதியம் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2025 04:00)