திரு. செல்லத்துரை கணநாதன்

செல்லத்துரை கணநாதன்

தோற்றம்: 28 செப்டம்பர் 1953 - மறைவு: 29 ஜூன் 2024

யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை கணநாதன் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, மனோன்மணி, பாலச்சந்திரன், இராசலிங்கம், பத்மநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபிரதா, வகிதா, கரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமேஸ்கரன் (கிருஸ்ணா ஸ்ரோர்ஸ் உரிமையாளர-கொழும்பு), நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காசினி, அஸ்வினா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (மனேச்சர்), ஞானசூரியன் மற்றும் வசந்தா, செல்வநாயகி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற சரசமலர் (ராசாத்தி), புஸ்பகலா, ராணி (கலா-அவுஸ்திரேலியா), பவானந்தராணி (மணி), மகேந்திரராஜா (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

சாந்தலிங்கம் (தம்பு), கிருஸ்ணபாலன் (அவுஸ்திரேலியா), ஆனந்தரூபன் ஆகியோரின் சகலனும்,

சிவகுருநாதனின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

புளியங்கூடல் தெற்கு.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2024 04:00)