டாக்டர். செல்லத்துரை செல்வரட்ணம்
(ஓய்வுபெற்ற பல் வைத்திய நிபுணர்)
தோற்றம்: 22 டிசம்பர் 1958 - மறைவு: 15 ஜூன் 2024
மட்டக்களப்பு ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செல்வரட்ணம் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
Dr. சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. கவீஷா, Dr.உதாரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
Dr.சஞ்சீவின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனலக்ஷ்மி, வினாயகமூர்த்தி, குழந்தைவேலு, லோகிதப்பிள்ளை மற்றும் திலகவதி, லீலாவதி, மாணிக்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2024 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியிலிருந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
35/4A, மிலேனியம் மாவத்தை,
தெஹிவளை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
