Mrs. Sellethurai Yoghamma

(ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை)

Sellethurai Yoghamma

Date of Birth: 03 August 1932 - Deceased: 05 December 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகம்மா செல்லத்துரை அவர்கள் 05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி கொழும்பில் சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா -விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதர் - பர்வதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவதனி, மதிவண்ணன், ரஜனி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சேனாதிராசா மற்றும் பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேசவராசா, கீதா, விஜயா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராம், அமுதா, கீர்த்தனா, தக்‌ஷினியா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2025 00:00)