திரு. செல்லையா புண்ணியமூர்த்தி
(சட்டத்தரணி, சமாதான நீதவான், வவுனியா மாவட்ட உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற பதில் நீதிபதி)
தோற்றம்: 19 ஆகஸ்ட் 1928 - மறைவு: 06 ஆகஸ்ட் 2021
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா புண்ணியமூர்த்தி அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
கெங்காதரன், லிங்காதரன், புவிதரன், நிரஞ்சனா, மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருபாலினி, துளசிமணி, ரகுணா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிபன், தமரா, ருஸீபன், அஸ்லி, டனியா, ஹென்றிக், அலியா, அனியா, ரகுலன், விதுலன், கானவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஈத்தன், லேனா, இனெஸ், அமெண்டா, ஹர்மன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
