டாக்டா். செல்லையா சண்முகலிங்கம்
தோற்றம்: 15 அக்டோபர் 1937 - மறைவு: 20 மார்ச் 2026
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான குமாரவேல் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராஜேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ஏகாம்பரநாதன், பூரணானந்தம்பிள்ளை மற்றும் செல்வரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், பரமநாதன் மற்றும் சண்முகநாதன், திருநாவுக்கரசு, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
