திரு. செல்வச்சந்திரன் சின்னத்துரை
(இளைப்பாறிய உதவி அதிபர் - யாழ்.கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறை)
தோற்றம்: 27 மார்ச் 1929 - மறைவு: 12 மே 2025
யாழ். உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - இராசம்மா தம்பதியினரின் செல்வ மகனும், காலஞ்சென்ற செல்லமாணிக்கம், துரைராஜா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜலச்சுமி, ருக்குமணி ஆகியோரின் மைத்துனரும்
செல்வேஸ்வரன், ஸ்ரீதர், காலஞ்சென்ற சத்தியநாதன், சத்தியதேவி சச்சிதானந்தன், சசிகலாதேவி ஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்,
கதாநாயகி, சாந்தா, காலஞ்சென்ற சிவநேசன், உஷா, நந்தசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலானி, மரியா பிரகாசினி, மரின் பிரகாஷ், சிந்து - வினோத், மணியரசன், நித்திலன், நயந்தன், கஜனி, ஜீவனா, கவிதன் ஆகியோரின் அன்பு பேரனும்
சிவின், டிவினா ஆகியோரின் பூட்டனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 10:00 மணி வரை Colfeian Ground (Horn Park, 76C Eltham Road, Eltham, SE12 8UE) இல் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Hither Green Crematorium Chapel (Verdant Lane, London SE6 1TP, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
