திருமதி. செல்வலிங்கம் கமலாம்பிகை

(ஓய்வுநிலை சங்கீத ஆசிரியையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கீத பூசணம்)

செல்வலிங்கம் கமலாம்பிகை

மறைவு: 18 ஏப்ரல் 2025

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வலிங்கம் கமலாம்பிகை அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று ஈசனது பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டார்.

அன்னார், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாகிய காலஞ்சென்ற உயர்திரு. பரமலிங்கம் கந்தசாமி - நயினை வரகவி  நாகமணிப்புலவரின் சிரேஷ்ட புதல்வி,

காலஞ்சென்ற நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு  மகளாரும்,

காலஞ்சென்ற செல்லையா - தவசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கும்பிளாவளை செல்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருவருட்செல்வன் (பிரதி நிதியாளர் - விபுலானந்தா அழகியற் பீடம்,மட்டக்களப்பு), அனிந்திதை (ஆசிரியை - யா/செங்குந்தா இந்துக் கல்லூரி), பதஞ்சலி (பாபு-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானசம்பந்தன் (ஓய்வுநிலை அதிபர் - யா/கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் சாரணர் மாவட்ட உதவி மாவட்ட ஆணையாளர்), ஜீவபூரணி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு), கலைமகள் (தாதிய உத்தியோகத்தர் -  ஜேர்மனி)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சங்கீர்த்தனன், சாம்பவி, யாதவன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நர்த்தனா, மாதுரி, கோகீரன், சாதனா, மயூரி, லயகரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலம்சென்றவர்களான மகேஸ்வரி, கனகசபாபதி (ஆசிரியர் - பரம்பரை அறங்காவலர் சபை உறுப்பினர், நாகபூசணி அம்பாள் ஆலயம் - நயினாதீவு), குகதாசன் (வட்டார கல்வி அதிகாரி), காமாட்சிசுந்தரம் (அதிபர்), சவுந்தரம், பராசக்தி, மகாலிங்கம் (பிரதம எழுதுவினைஞர்), கனகாம்பிகை, கண்ணன், இராசரெத்தினம் (பிரதம சுங்க அதிகாரி), மற்றும் லலிதாம்பாள் (ஆசிரியை), பரமலிங்கம் (முன்னாள் செயலாளர் - வட - கிழக்கு மாகாண பொதுநிர்வாக ஆணைக்குழு, தலைவர் - அறங்காவலர் சபை, நாகபூசணி அம்பாள் ஆலயம், நயினாதீவு), காலஞ்சென்ற மகாதேவா (ஓய்வுநிலை தபாலதிபர்), ஞானசுந்தரம் (அதிபர்), வைத்திய கலாநிதி நவரட்ணராஜா (வைத்தியப் பணிப்பாளர்- மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலம்சென்ற குமாரவேலு, கோகிலாம்பாள், காலம்சென்ற பார்வதி, கனகம்மா, கணபதிப்பிள்ளை, பாலசுந்தரம், நீலாம்பிகை, புவனேஸ்வரி, நாகேஸ்வரி, காலம்சென்ற கணேசு, கமலாதேவி, சாந்தினி, மங்களேஸ்வரி, கலாதேவி, காலஞ் சென்றவர்களான கமலாசினிதேவி, அருந்ததிதேவி, திலகரத்தினம், வாசுகிதேவி, தில்லைக்கோண், யசோதராதேவி மற்றும் அப்பமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மகாலிங்கம் - நீலாம்பிகை,புவனேஸ்வரி, பரஞ்சோதி - தவமணி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்

அன்னாரி இறுதிக்கிரியைகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

இல- 604/6, கலைமணி ஒழுங்கை,

கட்டப்பிராய் (3ம் கட்டையடி - கலைமணி அம்மன் கல்யாண மண்டப ஒழுங்கை),

யாழ்ப்பாணம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2025 04:00)