Mrs. Selvamalar Sivakumaran

Selvamalar Sivakumaran

Date of Birth: 28 August 1964 - Deceased: 13 February 2025

யாழ். இணுவில் மேற்கு கோவில் வாசலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சிவகுமாரன் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - கதிர்காமநாயகி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற துரைராசா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிந்துஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்), சிவகாசிக்கா (Cost Control Engineer) ஆகியோரின் அன்பு தாயாரும்,

ரகுநாதன் (உரிமையாளர் - STR Constructions), பிரதீபன் (DFCC Bank) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஸ்வகனின் அன்பு பேத்தியும்,

ஜெயகுமாரன் (நோர்வே), ஜெயகலா (கனடா), ஸ்ரீ கலைவாணி (திருகோணமலை), தனகேசவன் (இலண்டன்), பிரசாந்தி (ஆசிரியை - யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகராஜா (சிவசக்தி-வவுனியா), காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

கருணை தவசோசியின் பெறாமகளும்,

நந்தினி (நோர்வே), கணேசகுமார் (துறைமுக அதிகார சபை - திருகோணமலை), பிரதீபா (இலண்டன்), சுரபாஸ்கர் (ஆசிரியர் - யாழ்.  மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி), சின்னராசா, அருட்செல்வி, காலஞ்சென்றவர்களான யோகதாஸ், சிவராஜா ஆகியோரின் மைத்துனியும்,

லோகநாயகி, கமலாம்பிகை ஆகியோரின் சகலியும்,

ஸ்ரீதரன் (மைத்துனியின் கணவர்), யதுர்சன், ஜனகன், அஸ்வின், அன்யா ஆகியோரின் பெரியம்மாவும்,

ஞானலோஜினி, கோகுலன், இராகுலன் (வைத்தியர்), கோபிதன், சர்மிலன் (வைத்தியர்), பிரதீபன், சிவரூபன், நிதேஷன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

யகதுகஷா, தீப்தன், ஷாருகேசி, ஆரங்கன், சஹானா, நிரஞ்சலா, லக்ஷாயினி ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2025 05:00)