திருமதி. செல்வமணி (மணி) சண்முகானந்தம்
தோற்றம்: 18 செப்டம்பர் 1950 - மறைவு: 21 மார்ச் 2026
யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமணி சண்முகானந்தம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சண்முகானந்தம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தர்மிளா, தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுமார், ஜதீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜானவி, தியானா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.30 - 2.00 மணி வரை Krematorium Feuerbestattung Sauerlan (Werkshagener Str.25 58515 Lüdenscheid, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
