திரு. செல்வநாயகம் வேலுப்பிள்ளை
(இளைப்பாறிய எழுதுவினைஞர்)
தோற்றம்: 21 மார்ச் 1942 - மறைவு: 17 ஏப்ரல் 2025
யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தங்கமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், இராசநாயகம் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மதுரம், ஜெகதீஸ்வரி மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் மைத்துனரும்,
செல்வகெளரி (சத்தியா - இங்கிலாந்து), மாதங்கி (சாயி - கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
உதயகுமரன், கரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
ஆர்த்தி, மயூரா, ஹரிஷன், ஹரிணி, ஹரித்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
