திருமதி. செல்வராஜா பூமணி

செல்வராஜா பூமணி

தோற்றம்: 12 ஜூன் 1925 - மறைவு: 30 மார்ச் 2025

யாழ். நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா, நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராஜா பூமணி அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நவற்கிரியில் இறையடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான, தம்பு - மாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற கந்தசாமி சத்தியபாமா (பாமா), நவரத்தினம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசுப்பிரமணியம் (பாலா - கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி (சரஸ்), பாலேஸ்வரன் (கனடா), பாலராஜா (அப்பன் - கனடா), பாக்கியராஜா (ராஜா - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2025 20:55)