திருமதி. செல்வராணி தேவகுமார்
தோற்றம்: 12 ஏப்ரல் 1969 - மறைவு: 13 செப்டம்பர் 2024
யாழ். கரவெட்டி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராணி தேவகுமார் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அழகதுரை-பூமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மகாதேவன்-காந்திமதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தேவகுமார் (காந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,
திபியன், லக்ஷியா, திசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நற்குணசிங்கம் (ராசு-சுவிஸ்), ஜெயசிங்கம் (ரஞ்சன்-சுவிஸ்), ஜெயபாலசிங்கம் (ஜெயபாலன்-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி, சுகந்தி, அழகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகாந்தன் (தேவன்-லண்டன்), தேவகாந்தி (தேவிகா- லண்டன்), காலஞ்சென்ற தேவமதி (துஷிதா) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்ற நிற்சிங்கம் (தங்கராசா), குமாரகுலசிங்கம் (குமாரர்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சபாரட்னம், தனபாலசிங்கம், துரைசிங்கம், சிறிஸ்காந்தம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
இராசமணி அவர்களின் ஆசை மருமகளும்,
ரோமா, பிரகாஸ்பரன் ஆகியோரின் உறவுவழிச் சகோதரியும்,
சந்துரு, சாறுக்கான், சருன், சந்தோஷ், திவாகரன், திவானி, தேனுஜன், மினக்ஷி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
பூஜா, டிலான் ஆகியோரின் ஆசை பெரியம்மாவும்,
நித்தியா, நிரோசன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-09-2024 சனிக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30-8:30 மணி வரையும், Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, காலை 8:30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
