Mrs. Selvarasa Saraswathy

(முன்னாள் கணக்காளர்- வவுனியா வடக்கு ப.நோ.கூ. சங்கம்)

Selvarasa Saraswathy

Deceased: 03 October 2025

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நைனாமடு நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா சரஸ்வதி அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா - முத்துக்குட்டி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்புராஜா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்வராசா (ஈசன் - ஓய்வுபெற்ற உப தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரசேகரன், பரராசசிங்கம், கமலாம்பிகை, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரி, தனராஜா, தவராஜா, செந்தாமரை, செல்வி, தயாபரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் நைனாமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2025 04:00)