திரு. செல்வராசா
மறைவு: 24 ஏப்ரல் 2025
பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், ஆர்ச்சியடி ஒழுங்கை கோப்பாய் தெற்கு கோப்பாயை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரவேலு செல்வராசா அவர்கள் 24-04-2025ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரவேலு கனகம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மைத்துனரும், hqn]f[gifu [';flsisலதீசன் (கணித ஆசிரியர் -கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), நளினி (இலண்டன்),காலஞ்சென்ற சயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2025 20:38)
