Mrs. Selvarathinam Ramanathan
Date of Birth: 23 June 1941 - Deceased: 26 May 2026
யாழ். காரைநகர் சக்கலாவோடையைப் பிறப்பிடமாகவும், களபூமியையும் அவுஸ்திரேலியா - சிட்னியையும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வரத்தினம் இராமநாதன் அவர்கள் 26-05-2026 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதன் (ஆசிரியர்) - சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரன் (அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன் (ஜக்கிய இராச்சியம்), சர்வேஸ்வரன் (கனடா), றமணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவகுமாரி, காலஞ்சென்ற சிவசாந்தினி, குலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மேஸ், சிவாசன், மனோசன், கிருசா, நிமலன், சதீசன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நேசரத்தினம், மருத்துவர் கனகமலர், கமலாம்பிகை, பத்மாவதி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.15 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை Liberty Funeral, Granville அஞ்சலிக்காகவும் இறுதிக்கிரியைக்காகவும் வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணயிளவில் திருவுடல் Rockwood South Chapel மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
இராஜேஸ்வரன்:- +61 401 945 654
விக்கினேஷ்வர்:- +44 752 732 5389
சர்வேஸ்வரன்: +1 647 269 4139
றமணி:- +61 412 016 536
www.tamilthakaval.org
