திருமதி. செல்வரத்தினம் தவமலர்
தோற்றம்: 17 டிசம்பர் 1933 - மறைவு: 05 செப்டம்பர் 2024
யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் தவமலர் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-நல்லம்மா தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தவச்செல்வம் (ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை), செல்வரஞ்சன் (ஓய்வுநிலை ஆசிரியர்-யா/கைதடி விக்கினேஸ்வரா), செல்வரதி (சமுர்த்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்), செல்வநிதி (தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
நாகலோசனி, துவாரகா, ராமகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜந்தன் (இலண்டன்), தேனுகா, சங்கர் (இலண்டன்), சிந்துசன் (வைத்தியர்-ஐக்கிய அமெரிக்கா), கஜானன் (பொறியியலாளர்-இலண்டன்), தனுஜன், சாருஜன், ஐஸ்ணவி (யா/இந்து மகளிர் கல்லூரி), டினோசிகன் (யாழ் மத்திய கல்லூரி), அருணன் (ஆசிரியர்-புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), ஆர்த்திகா (வைத்தியர்-ஐக்கிய அமெரிக்கா), சுகந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற நவரத்தினம் (ஆசிரியர்) அவர்களின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முகவரி:-
இல-72, நாவலடி லேன்,
திருநெல்வேலி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
