திருமதி. செல்வரத்தினம் இராசகுமாரி

செல்வரத்தினம் இராசகுமாரி

மறைவு: 09 மே 2024

யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் இராசகுமாரி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. பொன்னையா (உணவக உரிமையாளர் - பண்டத்தரிப்பு) தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம் (உணவக உரிமையாளர் - பரந்தன்) அவர்களின் மனைவியும்,

அன்பழகன் (கனடா), ரவீந்திரன் (ரூபன் - பிரான்ஸ்), சற்குணநாயகி (பூபி- இலங்கை), கலைநாயகி (பபா- பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,

ரஞ்ஜினி, சரோஜினி, இந்திரராசா, சீலன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகிந்தராஜா, தவேந்திரராஜா, ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் தவகுமாரி (கனடா), தவராசா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரியும்,

கோபிராஜ், வருண், அபிலாஷ், சௌந்தர்யா, விக்ரம், தர்சிகா, தர்சன், தனுஷன், பென்ஜமின் ஜீலியஸ், பேர்னார்ட் ஜீலியன், பெனடிக் ஜீலியஸ் ஆகியோரின் பேத்தியும்,

தீசன், மதுரா ஆகியோரின் பேத்தியும்,

ஹஸ்வந்தின் பூட்டியும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
முகவரி:
 
இல-28, நாகபூசணி அம்மன் வீதி,
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2024 04:00)