திரு. செல்வரட்ணம் பாஸ்கரன்
தோற்றம்: 30 ஜூன் 1961 - மறைவு: 05 பெப்ரவரி 2025
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரட்ணம் பாஸ்கரன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று வவுனியா நெழுக்குளத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
அன்ன கமலேஸ்வரி அவர்களின் அன்புத் துணைவரும்,
காலஞ்சென்ற செல்வரஞ்சனி, கலைவாணி ஆகியாேரின் பாசமிகு சகோதரனும்,
பொன்னுத்துரை, இராஜகுமாரன் ஆகியோரின் மைத்துனரும்,
பிரதீபா, உமாசுதன், யுகப்பிரியா, உமாபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், நிலூஷ்கியா, அரவிந்தன் ஆகியோரின் மாமனாரும்,
பகீரதி, கோஇலக்கியன், அபிமன்யு, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது நெழுக்குள இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
