Mrs Senathirasa Umadevi (Uma)

Senathirasa Umadevi (Uma)

Date of Birth: 02 April 1944 - Deceased: 27 February 2024

வவுனியா. இரணை இலுப்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பம்பைமடு மற்றும் வைரவபுளியங்குளம் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட திருமதி. உமாதேவி சேனாதிராசா அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், இரணை இலுப்பைக்குளம் பாக்கியநாதன் (உடையார்) - காந்திமதி தம்பதியினரின் அன்பு மகளும்,

பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

திரு. நாகலிங்கம் சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காண்டீபன் (லண்டன்), தனஞ்சயன் (லண்டன்), தமிழினி (நோர்வே), மிதிலினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராகினி, சாந்தினி, கைலைநாதன், தீபதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்

அயன், அக்சன், ஜயானி, ஜெய்னன், மெல்லினா, அக்சயா, அட்சரா, ஆயவன், ஆதிரன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான திருமதி.குகதேவி தியாகராசா (ஓய்வுநிலை அதிபர்), திரு. குகதாசன் (கமநலசேவை அதிகாரி), திரு. யோகநாதன் (தபால் அதிபர்), திரு. சிவதாசன் (கணித ஆசிரியர்), திருமதி. பத்மாதேவி மகேந்திரராசா மற்றும் திருமதி. சுபத்திராதேவி மங்களேஸ்வரன், திருமதி. சுசிலாதேவி தெய்வேந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல- 9/4, இராசதுரை வீதி, வைரவபுளியங்குளம் வவுனியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் 01-03-2024 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் நடைபெற்று தகனக்கிரியைகள் இரணைஇலுப்பைக்குளம் இந்து மயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2024 05:00)