Mr. Sengamalai Alakappan

Sengamalai Alakappan

Date of Birth: 10 February 1937 - Deceased: 23 September 2025

இரத்தினபுர - காவத்தையைப் பிறப்பிடமாகவும், வத்தளை - ஹேக்கித்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செங்கமலை அழகப்பன் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஜயலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வம், செல்வி, வசந்தி, சேகர், ரகு (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மோகன், சிவராஜ், தனபாக்கியம், புஸ்பராணி, சாந்தி (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

ஆனோஜ், வர்ஷா, கவினேஸ், டிலுக்‌ஷன், அபிலாஷினி, நர்த்தனா, ஷஷ்மிதா, தனுஷவின், திவ்யா, ஶ்ரீ, யுரேன், டிஜி ஆகியோரின் பாசமிக்க தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, சிதம்பரம் மற்றும் நல்லுசாமி, பொன்னுசாமி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

நடராஜின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கெரவலப்பிட்டிய மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-09-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2025 04:00)