Mr. Senthan Shanmuganathan

Senthan Shanmuganathan

Date of Birth: 08 October 1974 - Deceased: 02 November 2024

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேந்தன் சண்முகநாதன் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகநாதன்-சாந்தினி தம்பதியினரின் அருமை மகனும்,

காலஞ்சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் (தனபாலசிங்கம்)-இராஜேஸ்வரி (தேவி) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

தயாளினி (யாழினி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷான், டிவினன் ஆகியோரின் அன்புக்கினிய அப்பாவும்,

அபிராமி, அனந்தன் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

சாந்தி, கணேஸ், சுகந்தினி, நந்தினி, ராஜ், ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-11-2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.00-4.00 மணி வரையும், 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30-11.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.    

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2024 05:00)