Mr. Xavier Kanistran
Date of Birth: 03 July 1961 - Deceased: 15 July 2024
யாழ். கரம்பொன் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை நிரந்தர வசிப்பிடமாகவும், தற்போது இல-851, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி-கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேவியர் கனிஸ்ரன் அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சத்தியாப்பிள்ளை சேவியர்-ஸ்ரெலா சேவியர் தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜெனிற்றா வினிபிறற் அவர்களின் பாசமிகு கணவரும்,
மாலினி, டோமினிக், கமிலஸ், அசெம்ரா, பொஸ்கோ, டெலான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோசப் அருள், பிறீடா, ஜெனிற்ரா, சுஜாந்தி, சில்வி, றெமிஜியஸ் ரமேஸ், வில்வராஜா, பிறேமராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சிடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
