திரு. சேதலிங்கம் மயில்வாகனம்

சேதலிங்கம் மயில்வாகனம்

தோற்றம்: 15 செப்டம்பர் 1939 - மறைவு: 03 ஏப்ரல் 2025

யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேதலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சேதலிங்கம் (விதானையார்) - ராசம்மா தம்பதினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் - ஞானகமலாம்பிகை தம்பதினரின் பாசமிகு மருமகனும்,

சத்தியவதிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

சுரேன் (ஐக்கிய இராச்சியம்), சுசேதா (அவுஸ்திரேலியா), சேதுலிங்கம் (சதீஸ் நீலன் - மாவீரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜூ, ரோகிணி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஐயாத்துரைப்பிள்ளை, ஞானகுரு, குமரகுரு ஆகியோரின் சகோதரரும்,

தரன், அரன், ஹரிணி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அர்ஜூன், இசான், பிரியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2025 செவ்வாய்கிழமை அன்று காலை 9:00 - 11:00 மணி வரை Pine Grove Crematorium (Kinghton Str, Minchin Bury NSW 2770) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2025 04:00)