திருமதி. சேது (சேதா) சிறிகாந்தன் B.A

சேது (சேதா) சிறிகாந்தன் B.A

தோற்றம்: 01 ஜனவரி 1973 - மறைவு: 20 நவம்பர் 2024

யாழ். அச்சுவேலி, வளலாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கில்னர் ஒழுங்கை, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேது சிறிகாந்தன் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன் (ஒய்வு நிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்)-அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஒய்வுபெற்ற நில அளவை அத்தியட்சகர்)-பாக்கியலட்சுமி தம்பியினரின் மருமகளும்,

சிறிகாந்தன் (DO, R/Aclg Office-Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹம்சிகா (A/L2024, யா/அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரி), துதீசன் (தரம்-10, யா/இந்துக் கல்லூரி), அகீசன் (தரம்-7, யா/அச்சுவேலி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காவேரி வீரசிங்கம் (கனடா), கங்காதரன் (கனடா), யமுனா கருணாநிதி (கனடா), சிவதரன் (கனடா), பவானி ஞானேந்திரன் (அவுஸ்திரேலியா), திருவேணி அன்ரன் கமிலஸ் (DO, பிரதேச செயலகம்-பச்சிலைப்பள்ளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வண்ணை கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகவரி:-

424/1/1, (14) கில்னர் ஒழுங்கை,

கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2024 05:00)