திரு. சங்கரநாராயணபிள்ளை மணிவண்ணன்
(ஓய்வு பெற்ற பிரதி அதிபர் - மட். சிவானந்த வித்தியாலயம் தேசிய பாடசாலை)
தோற்றம்: 12 ஜூலை 1964 - மறைவு: 15 ஜூன் 2026
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், நாவற்குடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சங்கரநாராயணபிள்ளை மணிவண்ணன் அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரநாராயணபிள்ளை - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற முருகேசு - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி (ஓய்வு பெற்ற உபபீடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. தமனீயன் (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு தந்தையும்,
Dr.மதுஷிக்கா (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,
விஷாகமித்ரா அவர்களின் அன்பு பாட்டனாரும்,
மைதிலி, பிரியதர்ஷினி, பகீரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரி, தனேஸ்வரி, ருத்ரேஸ்வரி காலஞ்சென்ற சிவகணேசமுருகமூர்த்தி, பரமேஸ்வரன், முருகவேள் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று நாவற்குடா படுகாட்டார் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
