திருமதி. சண்முகலிங்கம் அன்னலட்சுமி
தோற்றம்: 25 ஜூலை 1957 - மறைவு: 04 மார்ச் 2025
யாழ். அராலி தெற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அம்பனை தெல்விப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான வைத்தி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் (உரிமையாளர் - Elephant Metal) அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி (கனடா), தயாபரி (ஆசிரியை - யாழ். மகாஜனக் கல்லூரி), தேவகி (சட்டத்தரணி), கலையரசி, காலஞ்சென்ற திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரமணன் (கனடா), சுதாகரன் (நியூசிலாந்து), பார்த்திபன் (சட்டத்தரணி), திபாகரன் (கோப்பாய் ஆசிரியர் கலாசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சிறீஷான்,கார்த்திக் (கனடா), கெனீஷா, கிருத்திகா, ஜஸ்வந் ஆகியோரின் அன்புமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வரட்ணம், சிவகுரு, சதாசிவம், ராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2025 வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் கீரிலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
