Mr. Shanmugalingam Sivanesan
Date of Birth: 25 February 1966 - Deceased: 01 August 2025
திருகோணமலை 2ம் வட்டரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகலிங்கம் சிவநேசன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் - தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,
வானதி அவர்களின் அன்புக் கணவரும்,
சகுந்தலாதேவி, நவநேசன், மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற செல்வநேசன், வக்சலா, சித்ரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இரவீந்திரன், வாசுகி, ரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
அனுதரன் (சுவிஸ்), இந்திகா (அவுஸ்திரேலியா), விபுலன் (இலண்டன்), துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துவாரகா, விதூசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதீரா, ஆராத்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, 11:30 மணியளவில் உடலம் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
அம்மன் வீதி, 1ம் குறுக்குத் தெரு,
மீசாலை கிழக்கு, மீசாலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
