Mr. Shanmugam Kasippillai
(உரிமையாளர்- வேல்முருகன் விநியோகஸ்தர், மட்டக்களப்பு, Unilever Srilanka, Pyramid Wilmer (pvt) Ltd, Flora Food Group)
Date of Birth: 21 April 1956 - Deceased: 04 February 2025
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் - நவரட்ணபூபதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
புஸ்பவதி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சதீசன், திவ்யா, வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாதசுந்தரம் (சன் பான்ஷி கவுஸ் - தேனகம்), ராஜேஸ்வரி, சுப்பிரமணியம் (சண்முகா ஏஜென்சி), யோகேஸ்வரி, ஞானசம்பந்தன் (வேல்முருகன் ஸ்டோர்ஸ்), காலஞ்சென்ற கெங்காதரன், வசந்தமலர், வசந்தகுமாரி, செல்வராசா (வேல்முருகன் ஸ்டோர்ஸ்), இராசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தீபிகா, ஆருரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலகவதி, சாரதாதேவி, அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதிரா, ஆதிரன் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது (இல- 290/1, திருமலை வீதி, மட்டக்களப்பு) இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
