Mr. Shanmugam Thambu

Shanmugam Thambu

Date of Birth: 28 October 1933 - Deceased: 22 January 2025

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 85 கட்ஷன் வீதி, Paris - பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் தம்பு அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி (விசாலாட்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, ஆறுமுகம், பழனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கமலம், கந்தையா, நாகலிங்கம், பூமணி, பாக்கியம், கமலம், நடராசா, பரமலிங்கம் மற்றும் கனகம்மா, சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், தில்லையம்மா மற்றும் சறோஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

குகநேசன் (நேசன்), புஸ்பராணி (கலா), மனோராணி (மதி), உதயராணி (உதயா), பாலகெளரி (கெளரி), நகுலேசன் (நகுலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி, கிருபானந்தன் (ஆனந்தன்), கருணாகரன் (கரன்), லோகஜோதி (கற்கண்டு), தர்மிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சதுஜன், யதிசாந், சானுஜா, அனுசாந்- பானுஷா, அனோஜிகா, தனுசாந், கபிசாந், தேனுஷா, யதுர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும்,

கைலாஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 03-02-2025 திங்கட்கிழமை காலை 8.30 - 1.30 மணி வரை Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2025 05:00)