Mrs. Shanmugam Vijayalaxmi

Shanmugam Vijayalaxmi

Date of Birth: 17 December 1948 - Deceased: 01 April 2024

யாழ். காரைநகர் தன்னையை பிறப்பிடமாகவும், மணற்காட்டு அம்மன் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் விஜயலட்சுமி 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - சுந்தரம்மா தம்பதியினரின் மகளும்,
 
காலஞ்சென்ற செல்லையா - நல்லம்ம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா சண்முகம் அவர்களின் மனைவியும்,

தவயோகேஸ்வரன் (லக்ஷ்மி றேடர்ஸ் - யாழ்ப்பாணம்), தவயோகேஸ்வரி (லண்டன்), தவரூபன் (ரூபன் மல்டி றேட் சென்றர் - யாழ்ப்பாணம்), தவமலர் (பதுளை), தவக்குமார் (ஆசிரியர்- காரைநகர் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
இந்திராணி, காலஞ்சென்ற சோமலிங்கம், புனிதவதி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சர்வானந்தலிங்கம் (KVK Super Stores - UK), சிவரூபன் (சிவரூபன் ஸ்ரோர்ஸ் - பதுளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகா, மேனகா, லிங்கா, பதுஷன், தக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை அன்னாரின் இல்லத்தில் 04-04-2024 வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2024 04:00)