திரு. சண்முகநாதன் ஈஸ்வரம்பிள்ளை
தோற்றம்: 03 பெப்ரவரி 1939 - மறைவு: 10 ஜூன் 2025
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், Milton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் ஈஸ்வரம்பிள்ளை அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரம்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
அன்னலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ரனுஷா, பிறீனா (Shawn) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தன், றீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சூரியா, அம்ஷுலா, ஜாரெத், நியாலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஹாரா அவர்களின் அன்புப் பூட்டனும்,
பத்மநாதன், காசிநாதன், புஷ்பநாதன், பத்மலோஷனி, மங்களேஸ்வரி, மகேந்திரநாதன், விமலநாதன், ராதா, கணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-06-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
