திருமதி. சண்முகநாதன் புஸ்பவதி
தோற்றம்: 16 செப்டம்பர் 1941 - மறைவு: 18 ஜூன் 2026
யாழ். நல்லூரைப் பிறப்பிடமா கவும், நீர்வேலி, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் புஸ்பவதி அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா , இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் (ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன் (பிரித்தானியா ), ஸ்ரீதரணி, ஸ்ரீதர்சினி, ஸ்ரீவரதன் (பிரித்தானியா ), காலஞ்சென்ற ஸ்ரீ முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயமாலா , சேவல்கொடி, உதயகுமார், நளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வாமதேவன் (இராசா டீசல் எஞ்சினியரிங் உரிமையாளர்), தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சோமலிங்கம், பாலசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ருக்ஷியா, ஜாக் நோலர், ஹரி விருக்ஷன், நிருஷன், வேணிஷா , சுகேஷ், சுவர்ஷா, ஸ்ரீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2026 ந.ப 12:00 மணியளவில் 68/18,ஸ்ரீவாசா , உப சாந்தசோலை வீதி, பூந்தோட்டம், வவுனியா எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2026 03:02)
