Mr. Shanmuganathan Thibakaran

(இலங்கையின் முன்னணி வயலின் வித்துவான், போதனாசிரியர் - கட்புல மற்றும் அரங்காற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் - கொழும்பு)

Shanmuganathan Thibakaran

Date of Birth: 12 March 1973 - Deceased: 15 January 2025

யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு மஞ்சத்தடி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் திபாகரன் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வரணி வேலுப்பிள்ளை சண்முகநாதன் - சுந்தரராணி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

சின்னத்துரை நடராசா (இணுவில்) (ஓய்வுநிலை காணி உத்தியோகத்தர், மாந்தை கிழக்கு, துணுக்காய்) - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கவிதா (முன்னாள் ஆசிரியை - பா‌ண்டிய‌ன்குளம் மகா வித்தியாலயம் - மல்லாவி,  த‌ற்போதைய ஆசிரியர் - நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும், 

தாமோதரன் (மாணவன் பரி. தோமாவின் கல்லூரி, கல்கிசை), கௌரிசங்கரன் (மாணவன் பரி. தோமாவின் கல்லூரி, கல்கிசை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹரிஹரன் (கண்ணன்), அங்கவை (அவுஸ்திரேலியா) சங்கவை (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அரவிந்தன், சங்கீதா (பிரான்ஸ்), கிரிதரன், சிவதட்சணி,  ஜீவராஜ், சிறிசுதன், துஷ்யந்தன், அர்ச்சனா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் மற்றும் நாகபூஷணி ஆகியோரின் மருமகனும்,

கணேசநாதன் (கனடா), காலஞ்சென்றவர்களான சிவநாதன் (கனடா), கணேஷ்வரி மற்றும் தவமலர், சிவமலர் ஆகியோரின் பெறாமகனும்,

பிராமி, லதாமி ஆகியோரின் சித்தப்பாவும்,

ஹரிணி, அனுஷ்கா, அபிநிஷா, கவிநயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஹர்ஷிணி, சபரிஹரிஷ், சாம்பவி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். 

அன்னாரின் புகழுடல் 16-01-2025 மற்றும் 17-01-2025 ஆகிய தினங்களில் காலை 9:00 - 6:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-01-2025 சனிக்கிழமை அன்று இணுவில் மஞ்சத்தடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 05:00)