Mrs. Shanmugathasan Manonmany

Shanmugathasan Manonmany

Deceased: 02 October 2025

யாழ். சரசாலை மத்தி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அராலி தெற்கு, வட்டுக்கோட்டையினைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகதாசன் மனோன்மணி அவர்கள் 02-10-2025 இன்று அராலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (சோமு) - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

 கைலாயபிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரன் (அஞ்சலகம்-சாவகச்சேரி), ஆரூரன் (பிரதேச செயலகம்-சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புனிதா (பிரதேச செயலகம்-சாவகச்சேரி), நீரஜா ஆகியோரின் அன்பு  மாமியாரும்,

அனோஜன், அனுராகன், அனுஸோபன், அனுஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று 2.00 மணியளவில் அராலியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அராலி பூனாவடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2025 21:33)